2025 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. காதலித்தால் உங்கள் காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். புதிய காதல் மலரவும் வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டால் சிகிச்சை வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றன. நோய் இருந்தால் அதில் இருந்து விடுபடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் இருந்தால் அடைவதற்கான வாய்ப்பு அல்லது குறையும் வாய்ப்பு உள்ளது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருந்து கொண்டே இருக்கும். உடல் உழைப்பு இல்லாமல் வருமானம், சம்பாத்தியம் என்பது இருந்துகொண்டே இருக்கும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து, வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். வழக்குகள் இருந்தால் மீண்டு வருவீர்கள். தொழில் சுமார்தான். தொழிலில் பெரிதாக லாபம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.
