2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8-ஆம் இடத்தில் குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால் ஒருபக்கம் பிரச்சினை, இன்னொரு பக்கம் மகிழ்ச்சி என இரண்டும் இருக்கிறது. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல் இருக்கிறது. இயற்கையாகவே தெய்வ அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காதலிப்பவர்களாக இருந்தால் உங்கள் காதல் திருமணத்தில் முடியும். முறிந்த காதல் மீண்டும் சேரும். ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் ஏற்படும். வேலை வாய்ப்புகளில் கவனமாக இருங்கள். உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகளால் பிரச்சினை, போராட்டங்கள், வெளியில் சொல்ல முடியாத விஷயங்கள் ஏற்பட்டு விலகும். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. தேவையற்ற கடன்களை தவிருங்கள். எது எப்படி இருந்தாலும் லாபம் ஏதோவொரு விதத்தில் நன்மையாக முடியும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கிறது. நோய் மற்றும் கடன் இரண்டும் பெரிய அளவில் இருந்தால் குறையும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து கிடைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் சுமாரான அளவில் செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் இஷ்டதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.
