2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நிலம், வீடு வாங்குவதற்கான வாய்ப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் ஆகியவற்றை கிரகங்கள் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கும். பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எல்லாவிதமான உறவுகளையும் மெயின்டைன் செய்யுங்கள். அவர்களால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் இருக்கின்றன. கல்வியில் கவனமாக இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. வேலை, வாய்ப்புகளை பொறுத்தவரை வேலை இருக்கிறது. அதேநேரம் அந்த வேலையில் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. தொழில் சுமார். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. எல்லாவற்றிலும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். தேவையற்ற கடன்களை தவிருங்கள். இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.
