2025 மார்ச் 11-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கொஞ்சம் பொறுமை, நிதானமாக செயல்பாடுகள். சொந்தமாக இடம், வீடு வாங்க, கட்ட சந்தர்ப்பங்கள் இந்த வாரம் உண்டு. பொருளாதார நிலைகள் நார்மலாக இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் உண்டு. உங்கள் பயணத்தில் தடை ஏற்பட வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் தேவையற்ற பயணங்களை தவிருங்கள். உறவுகளால் நன்மை, பிரச்சினை இரண்டுமே இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் திருப்தியற்ற மனநிலை என்பது இருந்து கொண்டே இருக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட், டூர் அல்லது டிராவல் ஆகியவையும் இருக்கின்றன. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம் அமையும். தொழில் பரவாயில்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கும். பணம், பொருள் முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும், பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய நரசிம்மர் மற்றும் உங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 11 March 2025 9:32 AM IST
ராணி

ராணி

Next Story