2025 பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். அரசு சம்பந்தப்பட்டவற்றில் எச்சரிக்கையாக இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல்நலக்குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தால் ஓரளவு லாபம், வருமானங்கள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ், லாபம் இருக்கிறது. பொருளாதார நிலைகள் சுமார். எவ்வளவு சம்பாதித்தாலும் செலவினங்கள் என்பது இருந்துகொண்டே இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொண்டால் அவற்றில் நிறைய தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகள், மன வருத்தங்கள் உண்டு. வீடு, இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எல்லாவற்றிலும் தடைகள், போராட்டங்கள் வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகள் என்பது இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், டிஜிட்டல் கரன்சி எல்லாவற்றிலுமே பொறுமை, நிதானமாக செயல்படுங்கள். தொழிலும் சுமார். இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமானையும் நரசிம்மரையும் தரிசனம் செய்யுங்கள்.
