2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் தள்ளிப்போடாமல் செய்யுங்கள். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் நிலையாக இருக்காது என்பதால் எல்லாவற்றையும் பொறுமையாகவும், நிதானமாகவும் ஹேண்டில் செய்யுங்கள். மன அமைதியாக இருங்கள். உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள் இருக்கின்றன. சொத்துக்கள் விற்பதில் நிறைய தடைகள் உள்ளன. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் என்பது இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. வேலையில் உங்களுக்கான கௌரவம், புகழ், அந்தஸ்து கிடைக்கும். வேலையில் நிறைய தடை, பிரச்சினை, போராட்டம், மனக்குழப்பங்கள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் கிடைத்த வேலையை நல்லவிதமாக செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் சனி பகவானை வழிபாடு செய்யுங்கள்.
