2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. யாரிடம் பேசினாலும் கவனமாக பேசுங்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். கணவன் - மனைவி உறவு சுமார். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. விவசாயம் செய்தால் லாபம், வருமானம் இருக்கிறது. உங்கள் முயற்சிகளில் நிறைய தடைகள், போராட்டங்கள், பிரச்சினைகள், தடுமாற்றங்கள் இருக்கிறது. அதனால், புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். இளைய சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. வீடு, இடம், ஊர் மாற்றத்திலும் நிறைய தடைகள் இருக்கிறது. ஷேர் மார்க்கெட் போன்ற எல்லாவிதமான யூக வணிகங்களிலும் அடக்கி வாசியுங்கள். அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். இந்த வாரம் முழுவதும், சிவன் கோயிலில் இருக்கும் பிரம்மா மற்றும் முருகப்பெருமானை தரிசனம் செய்யுங்கள்.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)