2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில், கூட்டுத் தொழில் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். கணவன் - மனைவி உறவில் ஒருபக்கம் சந்தோஷமாக இருப்பது போன்ற தோற்றம், இன்னொருபக்கம் சண்டை, சச்சரவுகள் இருக்கும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வரவுகள் அதிகமாக இருக்கும் அதே வேளையில் செலவுகளும் இருக்கிறது. வாய்ப்புகள் இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். துரோகம் செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். உங்கள் எண்ணங்களுக்கு ஈடுகொடுக்க மாட்டார்கள். யாரையும் நம்பி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள். மிகவும் பொறுமையாக செயல்படுங்கள். வீடு மாற்றம், விற்பனை ஆகியவற்றில் தடைகள் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் உண்டு. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய இருந்தாலும் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. காதல் முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமான் மற்றும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானை தரிசனம் செய்யுங்கள்.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)