2025 ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எல்லாவற்றிலும் பொறுமை, நிதானமாக இருங்கள். எதிர்பாராத ஏமாற்றத்தை சந்திப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. நம்பியவர்கள் நன்மை செய்ய வாய்ப்புகள் இல்லை. தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டும் திருப்திகரமாக இல்லை. தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை தேவையற்ற வரவு, தேவையற்ற செலவு இரண்டுமே இருக்கிறது. உங்கள் முயற்சிகளில் பிரேக் ஏற்படும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமை, நிதானமாக இருங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். வருமானங்கள், சம்பாத்தியங்கள் உண்டு. நண்பர்களால் நற்பலன்கள், மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. இந்த வாரம் முழுவதும், முருகப் பெருமான் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 3 Feb 2025 5:15 PM IST
ராணி

ராணி

Next Story