2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பிரச்சினைகளை எதிர்கொண்டு ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். போக்குவரத்து, வண்டி, வாகனங்களில் எச்சரிக்கையாக இருங்கள். அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டிருந்தால் செய்து கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக இருக்கும். கையில் பணம், தனம் இருந்தாலும் தேவையற்ற செலவினங்களும் உண்டு. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். இந்த வாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். நன்கு சிந்தித்து செயல்படுங்கள். சொத்துக்கள் விற்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், எதிர்பார்த்த விலைக்கு போக வாய்ப்பில்லை. வீடு, இடம் மாற்றங்கள் ஏற்படுவது மாதிரியான ஒரு தோற்றம்; ஆனால் அதிலும் தடை இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், நன்மை இவை அனைத்தும் உண்டு. குடும்பத்தில் புது வரவு வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. இந்த வாரம் முழுவதும் முருகப் பெருமானையும், பிரம்மாவையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 21 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story