2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வி நன்றாக உள்ளது. கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. ஆனாலும்,செலவினங்களும் இருக்கின்றன. உங்கள் முயற்சிகளில் தடைகள், பிரச்சினைகள் இருப்பதால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். உறவுகளால் ஒருபக்கம் நன்மை, மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இன்னொரு பக்கம் அதே உறவுகளால் தேவையற்ற பிரச்சினைகளும் இருக்கின்றன. உங்களுடைய வேலை, வாய்ப்புகளில் கவனம் செலுத்துங்கள். வேலையில் திருப்தியில்லாத மனநிலை ஏற்படும். அதை மாற்றி கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். இந்த வாரம் முழுவதும், பெருமாள் மற்றும் சிவபெருமானை தரிசனம் செய்யுங்கள்.