2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கல்வியில் கவனம் செலுத்துங்கள். நீண்டதூர பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு சின்ன தடை ஏற்பட்டு அந்த பயணம் தொடர வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். அப்பாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சம்பள உயர்வு, பணி உயர்வு போன்றவையும் உண்டு. வழக்குகள் இருந்தால் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. ஆனாலும், எல்லா விஷயத்திலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். கிடைத்ததை வைத்து சந்தோஷமாக இருங்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை மகிழ்ச்சி, சந்தோஷம் சுமார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. இந்த வாரம் முழுவதும், நரசிம்மர் மற்றும் வாய்ப்பிருந்தால் பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.