2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் இருக்கிறது. கல்வி பரவாயில்லை. அப்பாவால் நன்மைகள் உண்டு. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருக்கிறது. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னரும், நீங்களும் லாபம் அடைவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் முயற்சிகளுக்கான வெற்றி கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. விவசாயத்தில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில், நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் அமையும். நினைப்பது அனைத்தும் நடக்கும். இந்த வாரம் முழுவதும், சிவன் வழிபாடு மற்றும் மகாலட்சுமியை தரிசனம் செய்யுங்கள்.