2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். பெரிய அளவில் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை வேறு அலுவலகம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. தெய்வ அனுகூலத்தை அதிகப்படுத்துங்கள். கையில் பணம், தனம் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கின்றன. நிறைய தொடர்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் ஏற்றம் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். அதை மாற்றுங்கள். லோனுக்கு விண்ணப்பித்து கிடைத்தாலும் கவனமாக செலவு செய்யுங்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்வது வேண்டாம். இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.
