2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி நன்றாக உள்ளது. அப்பா, அம்மா இருவரின் அன்பு, ஆதரவு அவர்களால் நற்பலன்கள் ஆகியவை இருக்கின்றன. நீண்டதூர பயணம் செய்ய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலுவையில் உள்ள பணங்கள் கைக்கு வரும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். தள்ளிப்போன திருமணங்கள் நடைபெறும் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை உண்டு. எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து உண்டு. வருமானங்கள் சுமார். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். விளையாட்டுத்துறையில் இருந்தால் விருதுகள், கேடயங்கள் கிடைக்கும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் வாங்குவதை தவிருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், மூத்த சகோதரியால் நன்மைகள் இருக்கிறது. எதிர்பார்த்த, எதிர்பார்க்காத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வரும். முயற்சி செய்துகொண்டே இருங்கள். நாளை என்று தள்ளி போடாதீர்கள். வாரம் முழுவதும் சிவன் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 26 Nov 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story