2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் கல்வி நன்றாக உள்ளது. தெய்வ தரிசனத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து உண்டு. அரசியல் துறைகளில் இருப்பவர்கள் கவனமுடன் பழகுங்கள். எதிரிகளால் உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பொருளாதாரத்தை பொறுத்தவரையில் கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. தொழில் லாபகரமாக இருக்கிறது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் பணியாற்றினாலும்; வேலை வாய்ப்புகள் பரவாயில்லை. வேலை இல்லை என்கிற சூழ்நிலை இல்லை. எதை நினைத்தும் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் சனி பகவான் உங்களுக்கு ஏதோவொரு உடல் உழைப்பு தொடர்பான வேலையை கொடுப்பார். கடன் கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அந்நிய மொழி பேசும் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம், மூத்த சகோதர - சகோதரிகளால் முன்னேற்றம் ஆகியவை உண்டு. சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருங்கள். இப்படி இருந்தால் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 12 Nov 2024 10:30 AM IST
ராணி

ராணி

Next Story