2024 அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக்கொண்டிருப்பதால் அடிக்கடி தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். நீங்கள் நினைத்த காரியங்கள் கொஞ்சம் லேட்டாக நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். உங்களது மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்பத்தி மற்றும் தயாரிப்பு துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம் இருக்கிறது. புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் வருமானம் இருக்கிறது. பெரிய அளவில் ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்வது வேண்டாம். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து, வருமானம் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் வேலையில் உங்கள் முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. இந்த வாரத்தில் அது கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். சொந்த தொழில், கூட்டுத்தொழில், ஒன்றிற்கும் மேற்பட்ட துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். இந்த வாரம் முழுவதும் சிவனை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.

Updated On 29 Oct 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story