2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் சுமாராக உள்ளன. தேவையில்லாத செலவினங்கள், விரயங்கள், நஷ்டங்கள், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. மண வாழ்க்கையில் கணவன் - மனைவிக்குள் தேவையில்லாத சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். சொந்த தொழில். கூட்டுத்தொழில் என இரண்டுமே திருப்தியில்லாத நிலைதான் இருக்கிறது. உங்கள் ராசிக்கு 4-ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர கதியில் ராகுவுடன் இருப்பதால் தொழில், வேலை எதுவாக இருந்தாலும் திருப்தி என்பது இருக்காது. வேலையில் எல்லாம் இருந்தால் கூட ஏதோவொன்றை இழந்தது போன்ற வாரமாக இருக்கும். அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருந்தாலும்; அதற்காக வர வேண்டிய பணம் லாக் ஆக வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகளால் தேவையற்ற மனவருத்தங்கள், பிரச்சனைகள், போராட்டங்கள் ஏற்பட்டு விலகும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு எதிலும் இறங்காதீர்கள். எல்லாவிதமான யூக வணிகங்களும் லாபத்தை கொடுப்பது மாதிரியான ஒரு தோற்றம். ஆனால், சுமாராகத்தான் உள்ளது. இந்த வாரம் முழுவதும் முருகனையும், பைரவரையும் பிரதானமாக வழிபாடு செய்யுங்கள்.

Updated On 15 Oct 2024 12:02 AM IST
ராணி

ராணி

Next Story