2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பெரிய அளவில் ஏதும் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் பார்த்து செய்யுங்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லாமல் இருக்கிறது. ஒரு கடனை அடைக்க இன்னொரு கடனை வாங்க வேண்டிய காலம். அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். யாருக்கும் கடன் வாங்கி கொடுக்காதீர்கள். உங்கள் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை. நீங்கள் நம்பியவர்கள் பெரிதாக உதவி செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. யாரையும் முழுமையாக நம்பி இருப்பதற்கான வாரமாக இந்த வாரம் இல்லை. தேவை இருந்தால் மட்டும் பயணம் செய்யுங்கள். இல்லையென்றால் தவிர்த்து விடுங்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கும். அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. தொழில் விட்டுவிட்டு நடக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்தி நன்றாக உள்ளது. ஆனால், லாபம் இல்லை. அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் தகராறு செய்யாதீர்கள். தேவையில்லாதவற்றை பேசாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்டுக்கொள்ளுங்கள். வேலையை பொறுத்தவரை, உங்களின் உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு தருவதில் தடைகள் இருக்கிறது. அதனால் இந்த வாரத்தில் எல்லாவற்றிலும் பொறுமை, நிதானம் தேவை. இந்த வாரம் முழுவதும் முருகனையும், மகாலட்சுமியையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 10 Sep 2024 3:52 AM GMT
ராணி

ராணி

Next Story