2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. குறிப்பாக டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோ கரன்சி, பிட்காயின்ஸ், கோல்ட் பாண்ட், லாட்டரி, ரேஸ் போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். எல்லாவற்றிலும் லாபம் வருவது போன்ற தோற்றம் மட்டுமே உண்டு. கிரக நிலைகள் சரியில்லாததால் விட்டதை பிடிக்க ஆசை வேண்டாம். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களின் பணம், பொருள் முடங்கிக்கொள்ள வாய்ப்புகள் உண்டு. வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் சுமாராக உள்ளது. செய்யும் வேலையை திருப்தியோடு செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் பார்க்கும் வேலையைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய வாய்ப்பு உள்ளது. அதனால் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். இல்லையென்றால் பின்னாளில் நிறைய வட்டி கட்ட வேண்டிய வாய்ப்பு உள்ளது. உறவுகளால் ஒருபக்கம் நன்மை, இன்னொரு பக்கம் தேவையில்லாத பிரச்சினைகள், நெருங்கிய உறவுகள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்பு என அத்தனையும் இந்த வாரம் இருக்கிறது. அந்தஸ்து, புகழ் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வேலையாட்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எது எப்படி இருந்தாலும் உங்கள் அரசியல் வாழ்க்கை ஏற்றம் மிகுந்ததாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயரையும், பைரவரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 9 Sept 2024 9:52 PM IST
ராணி

ராணி

Next Story