2024 செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த வாரத்தில் உங்களின் பணம், பொருள் முடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் கவனமாக இருங்கள். எல்லா விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் கையில் பணம், தனம் இருந்தாலும், செலவினங்களும் அதிகமாக இருக்கின்றன. உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதில் நிறைய தடைகள் உள்ளன. அவசரம், அவசியம் இருந்தால்தவிர பயணத்தை தவிர்த்துவிடுங்கள். புதிய ப்ராஜெக்ட் எதுவும் வேண்டாம். உறவுகளால் ஒரு பக்கம் நன்மை, இன்னொரு பக்கம் பிரச்சினை என இரண்டுமே உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பரவாயில்லாமல் இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்கள் இந்த வாரமும் காத்திருங்கள். அந்த பாக்கியம் கிடைப்பதில் நிறைய தடைகள் இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். ஒரு பக்கம் லாபம்; இன்னொரு பக்கம் சம்பாதித்த பணம் முடங்க வாய்ப்பு என இரண்டும் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் வேலையில் கவனமாக இருங்கள். பார்க்கும் வேலையில் இருந்து வெளியே வர வேண்டும் அல்லது வெளியேற்றப்படக் கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன. வாரம் முழுவதும் முருகன் மற்றும் நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய குருபகவானை வழிபாடு செய்யுங்கள்.
