2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் என்பது இருக்காது. உங்கள் பிசினஸில் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை என்பது இருக்கும். கல்வியில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில், பணம், தனம் என்பது இருக்கும். தேவையில்லாத எண்ணங்கள், சிந்தனைகளை தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் நேரத்திற்கு சாப்பிடுங்கள். எதிர்பாராத எண்டெர்டெயின்மென்ட் இருக்கிறது. அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரத்தில் உங்களுக்கு எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு இருக்கிறது. நிலுவைத் தொகை ஏதேனும் வர வேண்டி இருந்தால் வந்து சேரும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஆகியவையும் உண்டு. பெரிய அளவில் முயற்சி செய்தால் உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். லோனுக்கு விண்ணப்பித்து கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக இருங்கள். பெண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.