2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வியை பொறுத்தவரை பரவாயில்லை. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், லாட்டரி, டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்வதாக இருந்தால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். லாபம் வருவதுபோல் தோன்றும். ஆனால் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களது பணம் மொத்தமாக முடங்கிக் கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். அதனால் எந்தவிதமான முதலீடுகள் செய்வதாக இருந்தாலும் அடக்கி வாசியுங்கள். வீட்டில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்நிய மொழி பேசும் நண்பர்களால் உங்களுக்கு சகாயம், ஆதாயம் இருக்கிறது. நரசிம்மர் வழிபாடு மற்றும் பைரவர் வழிபாடு நல்லதொரு ஏற்றத்தை தரும்.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)