2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் முழுவதும் நிறைய டென்ஷன் மற்றும் அழுத்தங்கள் இருக்கும். உங்களுக்கோ, குழந்தைகளுக்கோ அல்லது வீட்டிலிருப்பவர்களுக்கோ காயங்கள் அல்லது விபத்துகள் ஏற்பட்டு அதனால் செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால் ஜாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது. தெரிந்த மற்றும் தெரியாத இடங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அடிதடியில் முடியலாம் அல்லது மனது புண்படும்படி பேசும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. கடன் வாங்குவதற்கான தூண்டுதல்கள் அதிகம் இருக்கும். குறிப்பாக 25, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் சிறு கடன் வாங்கினாலும் அது பெரிய கடனாக மாறும் வாய்ப்புகளும் அதிகம். அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். சந்திரனுக்கு நெல் மற்றும் வெல்லம் போட்டு விளக்கேற்றினால் டென்ஷன் குறைவதுடன், பேச்சிலும் கவனம் கிட்டும்.