2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரத்தில் இதுக்கு முன்பாக இருந்த குழப்பமான, எண்ணங்கள், சிந்தனைகள் நீங்கி ஒரு தைரியம், தன்னம்பிக்கை வருவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான சோர்சஸ் கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. அம்மாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக இருப்பதால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஏதோவொரு வேலை இருக்கிறது. ஆனாலும் எந்தவொரு வேலையிலும் ஒரு திருப்தியற்ற மனநிலை என்பது இருந்து கொண்டே இருக்கும். அதனால் வேலையை பொறுத்தவரை பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சொந்த தொழில் பரவாயில்லாமல் இருக்கும். கூட்டுத்தொழிலில் உங்களுக்கும், பார்ட்னருக்கும் புரிதல் என்பது குறைவாக இருந்தாலும் பிசினஸ் நன்றாக இருக்கும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் பரவாயில்லை. யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்காதீர்கள். இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயர் மற்றும் சனிபகவானை வழிபாடு செய்யுங்கள்.