2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பார்ட் டைம், ஆன்லைன், கரஸ் போன்றவற்றில் படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். உங்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையை பொறுத்தவரை, நீங்கள் செய்யும் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி, சின்ன சின்ன பிரச்சினைகள் இரண்டுமே இருக்கிறது. வேலை நன்றாக இருந்தாலும், நீங்கள் தனித்துவமாக தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. தேவை இருந்தால் கடன் வாங்குங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஆடி மாதமாக இருந்தாலும் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். நல்லவிதமாக உங்களுக்கு அமையும். இந்த வாரம் முழுவதும், நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 22 July 2024 10:49 PM IST
ராணி

ராணி

Next Story