✕
x
சிறப்பான துவக்கம் அமையும். இன்னும் 6 மாத காலத்திற்கு யாரும் உங்களை அசைக்கமுடியாது. தொழில், வேலை, வியாபாரம் மூலமாக சில சாதனைகளை இளம்பருவத்தினர் செய்வர். நிர்பந்தத்தால் வேலை செய்யும் இளம்பருவத்தினருக்கு நல்ல மாற்றம் வரும். குறிப்பாக ’டார்கெட்’ என்ற நிலையில் வேலை செய்பவர்களுக்கு, அந்த நிலை மாறி, எண்ணம் போல, படித்த துறைசார்ந்த, அவரவர் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றாற்போல் வேலை வாய்ப்புகள் உருவாகும். சுயதொழில் செய்வோருக்கு நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு உதவிகள், பெரிய அந்தஸ்து உடையோரின் அறிமுகம் மற்றும் அவரால் நல்லவைகள் கிடைக்கும்.

ராணி
Next Story