2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
4-ஆம் இடத்தில் நான்கு கிரகங்கள் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், நகை, ஆடைகள் வாங்குவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன. எல்லாம் இருந்தும் இல்லாதது போன்ற சூழ்நிலைகள், திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரிடமும் பேசாதீர்கள். தொழில் சுமாராக உள்ளது. வேலையில் கவனமாக இருங்கள். வேலையில் இருந்து வெளியே வர வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய காலங்கள் இருக்கின்றன. அதனால் எந்த துறையில் இருந்தாலும் செய்யும் வேலையை மகிழ்ச்சியாக பாருங்கள். திருமணம் நடைபெறாதவர்களுக்கு அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் உண்டு. இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. நல்ல நண்பர்கள் உங்களை விட்டு பிரிய வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் பெரிதாக லாபம் இல்லை. கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால் எல்லாவற்றிலும் அடக்கி வாசியுங்கள். தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். இந்த வாரம் முழுவதும் உங்களின் இஷ்ட தெய்வம் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.
