2025 ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம், பண சுழற்சி ஆகியவை இருக்கிறது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள், பேசாதீர்கள். உங்கள் பேச்சில் மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் உங்கள் பேச்சு தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பதற்கான வாரமாக உள்ளது. அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் செய்யுங்கள். உங்கள் தொழிலில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை ஆகியவை இருகின்றன. ஆனால் லாபம் இல்லை. வேலையில் தனித்துவமாக தெரிய வாய்ப்புகள் இல்லை. எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் திருப்தியற்ற மனநிலை என்பது இருக்கும். கல்வியில் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கவனமாக இருங்கள். தேவையில்லாத பொழுதுபோக்கு நிகழ்வுகள் வேண்டாம். எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் யோசித்து செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 22 April 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story