2025 மார்ச் 25-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடன் வாங்கியாவது சொந்தமாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. தேவையற்ற முயற்சிகளை தவிருங்கள். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், எண்டெர்டெயின்மெண்ட் இருக்கிறது. எதிர்பாராத டூர் அல்லது டிராவல் இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. தொழில் தகராறு தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. தொழில் சுமாராக உள்ளது. அப்பாவுடைய அன்பு ஆதரவு கிடைக்கும். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். ரிசர்ச், பி.ஹெச்.டி. செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். இந்த வாரம் முழுவதும் முருகனையும், தன்வந்திரி பகவானையும் வழிபாடு செய்யுங்கள்.
