2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகள் கைகூடும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு வகையில் நன்மையைச் செய்வார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக சுயதொழில், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் ஆகியவை செய்பவர்களுக்கு அவரவர் துறைகளில் நல்ல லாபம், வருமானம் இருக்கிறது. உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், இளைய சகோதர - சகோதரிகளால் நன்மை ஆகியவையும் இருக்கிறது. துணிந்து சில முடிவுகளை எடுங்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்க வாய்ப்புள்ளது. வீடு, இடம் மாற்றங்கள் உண்டு. புதிய சூழ்நிலைகள், புதிய இடங்களில் வாழ்க்கை நடத்துவீர்கள். சொத்துக்கள் விற்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டும் நன்றாக உள்ளது. மணவாழ்க்கையில் கணவன் - மனைவி உறவு சுமார். இரண்டாம் திருமணம் மகிழ்ச்சிகரமாக அமையும். உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு, பொருளாதார உதவி ஆகியவை கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.
