2025 பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஒருபக்கம் வெற்றி, இன்னொரு பக்கம் நிறைய போராட்டம் இரண்டும் இருக்கிறது. நீங்கள் நினைப்பது அனைத்தும் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்க்கும் செய்திகள் கைகூடி வரும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உதவி செய்வார்கள். உங்களை நீங்களே டெவலப், அப்டேட் செய்வது நல்லது. நிறைய கற்றுக் கொள்வதற்கு, சம்பாதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும் அல்லது அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். புதிய இடங்கள், புதிய சூழ்நிலைகளில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவுகளால் நன்மை, தேவையற்ற செலவுகள் மற்றும் பிரச்சினைகளும் இருக்கின்றன. வெளிநாட்டு தொடர்புகள் பரவாயில்லை. வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். உங்களை அறியாத எண்டெர்டெயின்மெண்ட், டூர், டிராவல், அவற்றிற்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும் ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 11 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story