2025 ஜனவரி 21-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கடன் வாங்குவதை தவிருங்கள். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில், நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை உங்கள் கையில் பணம், தனம் இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும், எதிர்பாராத காரியங்கள் நன்மையாக இருக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். நீங்கள் தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். திருமணம் தள்ளிபோனவர்களுக்கு திருமணம் உண்டு. அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். உயர்கல்வி பரவாயில்லை. நீண்டதூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். இந்த வாரம் முழுவதும் பெண் தெய்வ வழிபாட்டை அதிகப்படுத்துங்கள். முருகனை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 21 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story