2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ஒருபக்கம் எல்லாவிதத்திலும் வெற்றிபெறுவது மாதிரியான தோற்றம். ஆனால் சின்ன சின்ன தடைகள் இருக்கிறது. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கிறது. குறிப்பாக நீங்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இடம் வாங்குவதற்கான வாய்ப்பு, வீடு கட்டுவதற்கான சூழ்நிலைகளும் உள்ளன. விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தால் நல்ல மகசூல், லாபம் கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. அம்மா மற்றும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தொழில் சுமாராக உள்ளது. உங்கள் தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் செய்யுங்கள். கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலிலும் நல்ல வருமானம் இருக்கிறது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.