2025 ஜனவரி 07-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். உங்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு செய்யுங்கள். நீங்கள் நம்பி இருப்பவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டிருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் அதில் இருந்து விடுபடவோ, ஜெயிக்கவோ வாய்ப்புகள் உள்ளது. எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். எதிர்பாராத பயணம்; அந்த பயணத்தால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உறவுகளால் ஒருபக்கம் நன்மை; இன்னொரு பக்கம் சின்ன சின்ன மனவருத்தங்கள் இரண்டும் உள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், பிளாட்பார தொழில், ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு நல்லதொரு வருமானம், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. விற்பனையாகாத சொத்துக்கள் விற்பனையாகும். அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் பெருமாளை தரிசனம் செய்யுங்கள்.