2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடன் கிடைத்தாலும் வாங்காதீர்கள். ஏனென்றால், பெரிய அளவில் வட்டி கட்ட வேண்டிய காலகட்டம் உள்ளது. பொருளாதார நிலைகள் நன்றாக உள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், பிளாட்பார தொழில், ஆன்லைன் தொழில் உள்ளிட்டவற்றை செய்பவர்களுக்கு வருமானங்கள் நன்றாக உள்ளது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். யார் நல்லவர், கெட்டவர் என்பதை முடிவு செய்துவிடுவீர்கள். முயற்சியை விட்டு விடாதீர்கள். செய்ய வேண்டிய காரியங்களை உடனடியாக செய்துவிடுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நன்றாக உள்ளது. நகை, ஆடை ஆபரணங்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. நல்ல பெண் வேலையாட்கள் அமைவார்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கணவன் - மனைவி உறவு சுமார். இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையற்ற செலவினங்கள், பிரிவு, வைத்தியச் செலவுகள் ஆகியவை இருக்கிறது. நீண்டதூர பயணம் செல்ல வாய்ப்புள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் சனிபகவானை வழிபாடு செய்யுங்கள்.