2024 டிசம்பர் 03-ஆம் தேதி முதல் டிசம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொருளாதார நிலைகள் பரவாயில்லை. யாருடைய பணமாவது உங்கள் கையில் இருக்கும். டாக்குமென்டுகளில் பிரச்சினைகள் இருந்தால் சரியாகும். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை ஆகியவை ஏற்படும். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். துணிந்து சில முடிவுகளை எடுங்கள்; நாளைக்கு என்று ஒத்திவைக்காதீர்கள். எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு வெற்றி பெறுவீர்கள். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். உயர்கல்விக்காக வெளிமாநிலம், வெளி மாவட்டம், வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் இந்த வாரத்தில் அதற்கான முயற்சிகளை செய்யுங்கள். புதிய சூழ்நிலைகள், புதிய இடங்களில் வாழ்க்கை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங் ஆகியவற்றில் சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. அதேநேரம் போராட்டங்களும் இருக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் கவனம். எதிரிகளால் தேவையற்ற பிரச்சினைகள் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. பணி உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றினாலும் உங்கள் வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.