2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நட்பு மற்றும் மூத்த சகோதரிகளால் நன்மைகள் உண்டு. அதிலும், பெண் நண்பர்களால் உங்கள் வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் இருக்கிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருந்தாலும், அதற்கு தகுந்த, செலவுகளும் இருக்கிறது. வீடு, இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில் செய்பவர்களுக்கு தொழில் பரவாயில்லை. அதே சமயம் தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மையும் காணப்படுகிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டுவிட்டு நடக்கும். ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். டிஜிட்டல் கரன்சி வாங்க வேண்டாம். குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும். வேலையை பொறுத்தவரை கவனமாக இருங்கள். ஒருபக்கம் வேலையில், மாற்றம், முன்னேற்றம் இருக்கிறது. இன்னொருபக்கம் பார்க்கும் வேலையை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டிய காலமாக இருக்கிறது. சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து இருக்கிறது. வருமானங்கள் சுமார். இந்த வாரம் முழுவதும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை தரிசனம் செய்யுங்கள்.

Updated On 25 Nov 2024 9:31 PM IST
ராணி

ராணி

Next Story