2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள் ஒரே மாதிரியாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து சிந்தித்து செயல்படுங்கள். யாரை நம்புவது; யாரை நம்பக் கூடாது என்பதில் மிகப்பெரிய குழப்பம் இந்த வாரம் ஏற்படும். சரியான தூக்கம் என்பது இருக்காது. கையில் பணம் இருக்கும். ஏதாவது வாங்க நினைத்தால் வாங்குங்கள். இல்லையென்றால் தேவையற்ற செலவினங்கள், விரயங்கள் ஏற்படும். குறிப்பாக இடம், வீடு, நகை, புதிய ஆடைகள் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. கல்வி நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், பிளாட்பார தொழில், ஆன்லைன் பிசினஸ் செய்பவர்கள் அத்தனை பேருக்கும் இந்த வாரம் பரவாயில்லை. எதிர்பார்த்த செய்திகள் தாமதமாக வந்தாலும் உங்களுக்கு சாதகமாக வரும். வேலை, வாய்ப்புகள் சுமாராக இருக்கிறது. உடன் பணியாற்றுபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வேலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்த தொழில் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து போன்றவற்றில் இருப்பவர்களுக்கு உங்கள் துறைகளில் ஏற்றம் இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். பிற யூகவணிகங்களும் பரவாயில்லாமல் இருக்கிறது. வாரம் முழுவதும் முருகனுடைய வழிபாட்டை அதிகப்படுத்துங்கள்.

Updated On 5 Nov 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story