2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதாரம் பரவாயில்லை. யாருடைய பணமாவது உங்களிடம் இருக்கும். மணி ரொட்டேஷன் இருக்கிறது. ஆனால், உங்களுடைய விரைய ஸ்தானத்தை குரு, சனி பார்ப்பதால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் மனைவிக்காகவோ, குழந்தைக்காகவோ, பெரியவர்களுக்காகவோ செலவு செய்ய வேண்டிய சூழல்கள் உள்ளன. உங்கள் முயற்சிகள் வெற்றியடைவது போன்ற ஒரு தோற்றம்; ஆனால், சுமாராகத்தான் உள்ளது. சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் நன்கு யோசித்து செயல்படுங்கள். சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருப்பது மிக மிக முக்கியம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. வருமானம் சுமார். வீடு, இடம், ஊர் மாற நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொத்துக்கள் விற்பனையானால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடை இருக்கிறது. பெரிதாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். நார்மலான முதலீடே நல்ல வருமானத்தை கொடுக்கும். டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பொறுமையாக இருங்கள். சொந்த தொழிலை பொறுத்தவரை தொழில் தகராறு; தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 15 Oct 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story