2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். தெளிவான சிந்தனைக்கு வாருங்கள். எந்தவொரு வேலையையும் நாளைக்கு என்று ஒத்தி வைக்காதீர்கள். செய்ய நினைத்ததை உடனே செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவது போன்ற தோற்றம், ஆனால், சுமாராகத்தான் உள்ளது. அதனால் எல்லா விஷயங்களிலும் யோசித்து செயல்படுங்கள். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது சுமாரான பலன்களைத்தான் தரும். சுமாரான முதலீடே போதும்; நல்ல ரிட்டன்ஸ் கிடைக்கும். லாட்டரி, ரேஸ், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு சுமாரான அளவில் வருமானங்கள் இருந்துகொண்டே இருக்கும். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. எந்த துறையில் பணியாற்றினாலும் பிரகாசிப்பீர்கள். சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவாரக்ள். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். உங்கள் நட்பு வட்டாரம் டெவலப் ஆகும். பெண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டு. வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாக இருக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. சிறு தொழில், சுயதொழில், ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் செய்பவர்களுக்கு நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 14 Oct 2024 9:58 PM IST
ராணி

ராணி

Next Story