2024 ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையை பொறுத்தவரை கவனமாக இருங்கள். ஏதாவது ஒரு வேலை இருந்தாலும், உடன் பணியாற்றுபவர்களோ, உயர் அதிகாரிகளோ உங்களுக்கு ஒத்துழைப்பு தர வாய்ப்பு இல்லை. அதனால் எந்த துறையில் பணியாற்றினாலும் வேலையை தக்கவைக்க வேண்டும் என்றால் பொறுமையாக இருங்கள். தேவையில்லாத மனக் குழப்பங்கள் வேண்டாம். தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். போட்டித்தேர்வுகள், நேர்காணல் போன்றவற்றில் கலந்துகொண்டிருந்து, ஒருவேளை இந்த வாரத்தில் அதற்கான ரிசல்ட் வந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். இடம், லோன் போன்றவை வாங்குவதற்கு வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உள்ளன. இளைய சகோதர - சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டிய காலகட்டங்களாக இந்த வாரம் இருக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். ஆனால், லாபம் ஏதும் இல்லை. விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. யாருக்கும் கடன் கொடுத்தால் அந்த பணம் முடுங்குவதற்கு வாய்ப்புள்ளது,. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். திருமண வாழ்க்கையும் நன்றாக உள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்பவர்கள் செய்யலாம். இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் பிரம்மாவை வழிபாடு செய்யுங்கள்.