2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. உங்கள் வேலையில் எந்த அளவுக்கு முயற்சி எடுத்து இருக்கிறீர்களோ, அதே அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வாரமாக இந்த வாரம் உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி இருந்தால் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்க்கும் செய்திகள் நல்லவிதமாக வந்து சேரும். நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டால் தேர்வு செய்யப்படுவீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை ஜெயிப்பீர்கள். உங்கள் முயற்சிகள் ஏதோவொரு வகையில் வெற்றி பெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த வேலை சுமார். கூட்டுத்தொழிலில் கருத்து வேறுபாடுகள் அல்லது பார்ட்னருக்காக உழைக்க வேண்டிய காலகட்டங்கள் உண்டாகும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் ஆகியவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் காத்திருங்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், அதன் காரணமாக பிரிவு, போராட்டம் ஆகியவை இருக்கிறது. இந்த வாரம் முழுவதுமே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், எந்தவொரு வேலையையும் நாளைக்கு என்று தள்ளி வைக்காதீர்கள். எந்த அளவுக்கு முயற்சி செய்கிறீர்களோ அதே அளவுக்கு வெற்றிகள் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும், பிரம்மா மற்றும் பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.