2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம் இருக்கும். கடன் கேட்டு இருந்தால் கிடைக்க வாய்ப்புள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். நீங்கள் என்ன காரணத்திற்காக கடன் வாங்குகிறீர்களோ அது நிறைவேறுமா? என்றால் வாய்ப்பு இல்லை. அதனால் எல்லா விஷயங்களிலும் பொறுமையாக இருங்கள். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் பெரிய அளவில் வெற்றியடையும். நீங்கள் நினைத்தது நடக்கும். யாரை நம்பியிருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு ரூபத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெரும். வாழ்க்கையில் எப்போதெல்லாம் உங்களுக்கு பிரச்சினைகள், போராட்டங்கள், மனக்குழப்பங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் யாராவது அதனை தீர்த்து வைப்பார்கள். தேவையில்லாத டென்ஷன், குழப்பம், வருத்தங்கள் வேண்டாம். சில விஷயங்களை தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் செய்யுங்கள். வாழ்க்கையில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். திருமணம் தள்ளிபோனவர்களுக்கு அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளது. தொழில் சுமாராக உள்ளது. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வாருங்கள்.

Updated On 25 Jun 2024 12:15 AM IST
ராணி

ராணி

Next Story