2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் ஓரளவுக்கு பரவாயில்லை. பெரிய அளவில் பிசினஸ், தொழில்நிறுவனம் தொடங்க நினைத்தவர்கள், தொழில் முனைவோராக வர நினைத்தவர்கள் உங்களுடைய தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் முயற்சி செய்யுங்கள். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், நட்சத்திரங்கள் சாதகமாக இல்லாததால் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். தேவையில்லாத செலவினங்கள் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்தால் நல்ல மகசூலையும், லாபத்தையும் கொடுக்கும். புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. எந்த வேலையில் இருந்தாலும் திருப்தியற்ற மனநிலையில்தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் வேலையை திருப்திகரமாக செய்யுங்கள். வேலை, தொழில் இரண்டுமே சுமாராகத்தான் உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆராய்ச்சி, பி.எச்.டி போன்ற படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். மூத்த சகோதரி மற்றும் பெண் நண்பர்களால் மகிழ்ச்சி இருக்கிறது. குழந்தைகளால் நன்மை, பிரச்சினை இரண்டும் கலந்து இருக்க வாய்ப்புகள் உண்டு. யோசித்து செயல்பட்டால், நிச்சயமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் முழுவதும் பைரவரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யுங்கள்.

Updated On 1 Oct 2024 9:18 AM IST
ராணி

ராணி

Next Story