2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. காதல் வெற்றியடையும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை நீங்கள் கடன் வாங்காமல் இருந்தாலே போதுமானது. வேலையை பொறுத்தவரை ஏதோவொரு வேலை, வருமானம் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பாக இந்த வாரம் இருக்கிறது. நீங்கள் நினைப்பதை அப்படியே பின்தொடருங்கள். நாளைக்கு என்று ஒத்தி வைக்காதீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதமாக இருக்கும்போது, வெற்றியை அனுபவிப்பதற்கான சூழ்நிலைகள் இருக்கும்போது நேரத்தையும், காலத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேடுதல் என்பதை பெரிய அளவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த தேடுதல் உங்களுக்கு சிறப்பான அந்தஸ்தையும், புகழையும், கௌரவத்தையும், வருமானத்தையும் கொடுக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்களை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறு தொழில், சுய தொழில் செய்தால் அதுவும் நன்றாக இருக்கும். கல்வி மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். யாரை நம்புவது என்று இருந்த குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு கிடைக்கும். பெண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. புரொடக்சன் சார்ந்த துறைகளில் இருந்தால் உற்பத்திக்கு தகுந்த சேல்ஸ் மற்றும் வருமானம் இருக்கிறது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யுங்கள். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். வாரம் முழுவதும் நவ கிரகத்தில் இருக்கக்கூடிய சந்திரன் மற்றும் செவ்வாய் பகவானை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Sept 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story