2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. சின்ன சின்ன தடைகள் இருந்தாலும், சம்பள உயர்வு, பணி உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளன. வேலையை விட்டு நின்று விடலாம், வேறு அலுவலகம் மாறலாம், பேப்பர் போடலாம் என்று நினைப்பவர்கள் அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னருக்காக பெரிய அளவில் நீங்கள் உழைப்பீர்கள். மணவாழ்க்கையும் சுமாராகத்தான் உள்ளது. கையில் பணம், தனம் இருக்கிறது. பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமலே சம்பாதிக்க ஆசைப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவு பரவாயில்லாமல் இருக்கும். எடுக்கக்கூடிய காரியங்கள், எதிர்பார்த்த செய்திகள் அனைத்தும் நன்மையாக முடியும். நேர்காணலில் கலந்துகொண்டால் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனையாகாத சொத்துக்கள் இருந்தால் அவற்றை விற்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். தொழில் நிச்சயமற்ற தன்மை இருந்தால் கூட புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை மற்றும் வருமானம் இருக்கிறது. விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய வேண்டாம். உயர்கல்வி நன்றாக உள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் பரவாயில்லை. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்தவாரம் முழுவதும் சிவ தரிசனம் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.