2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம், தனம், பொருள் இருக்கும். எந்தெந்த விஷயங்களுக்கு முயற்சி எடுக்க வேண்டுமோ அதற்கு மட்டும் முயற்சி எடுங்கள். நன்கு தூங்கி, நேரத்திற்கு சாப்பிட்டு பழகுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. கல்வியில் கவனம் செலுத்துங்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல், லாபம் கிடைக்கும். விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் பண்ட், டிஜிட்டல் கரன்சி போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். இவை அனைத்துமே உங்களுக்கு கை கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. ஆனால், வருமானங்கள் சுமார். வேலையை பொறுத்தவரை உடன் பணியாற்றுபவர்கள், உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. அதனால் எல்லாவற்றிலும் அடக்கி வாசிப்பது நல்லது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்கள் நிறுத்தி, நிதானமாக செயல்படுங்கள். அப்போதுதான் லாபத்தை சம்பாதிப்பீர்கள். இந்த வாரம் முழுவதும் பகவான் கிருஷ்ணர் மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 22 July 2024 10:50 PM IST
ராணி

ராணி

Next Story