2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை கிடைக்கும். அதனால் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். உங்கள் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேறும். செய்ய நினைக்கும் வேலைகளை தாமதப்படுத்தாமல் உடனே செய்துவிடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் நன்றாக இருப்பதால், இந்த வாரம் உங்கள் கையில் பணம், தனம் நிறையவே இருக்கும். இடம் மற்றும் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் நன்றாகவே உள்ளது. உங்கள் தொழிலில் நிச்சயமற்ற தன்மை, தகராறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை மற்றும் அதன் மூலம் வருமானங்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றம் இருக்காது. அப்பாவினுடைய ஆதரவு கிடைக்கும். சிவ வழிபாடு மிகவும் முக்கியம்.
