2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

குரு மங்கள யோகம் கிடைக்கும். வேற்றுமொழி மக்களுடன் சுமூக உறவை மேற்கொள்ளும் பட்சத்தில் நற்பலன்கள் கிடைக்கும். ஆன்மீகம் மற்றும் சித்தர்கள் வழிபாடு நன்மையை உண்டாக்கும். 3 மற்றும் 4 தேதிகளில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். 5, 6, 7 ஆகிய தேதிகளில் தாயாரின் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்க, வீடு மற்றும் நிலம் வாங்குவது போன்ற விஷயங்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். 8, 9 ஆகிய தேதிகளில் உடல்நல பாதிப்பு, மனக்குழப்பம், பொருள் விரயம் போன்றவை ஏற்படும். இந்த நாட்களில் முடிந்தவரை கவனமாக இருப்பது நல்லது.

Updated On 3 Oct 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story